லயோலா கல்லூரி சொசைட்டியில் பணியாற்றிய பெண் ஊழியர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதபோதகர் சேவியர் அல்போன்ஸ் மீது புகார் கொடுத்தார். இந்தப் புகாரை நிர்வாகம் விசாரித்து, புகார் அளித்த பெண்ணை பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பெண் ஊழியர் சென்னை உயர் நீதிமன்றத்தில், லயோலா கல்லூரி நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் இந்தப் பெண் ஊழியர், லயோலா கல்லூரி மீது புகார் கொடுத்தார். இந்தப் புகாரில் கல்லூரி நிர்வாகம் சரியாக விசாரிக்கவில்லை, உரிய காரணமின்றி தன்னை பணி நீக்கம் செய்தது தவறு, அதனால் தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 64 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லயோலா கல்லூரிக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 64.30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை வரும் பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க:பாலுறவுக்கு கூப்பிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பெண்: வைரல் காணொலி!