ஊரடங்கு தளர்வையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் இன்றுமுதல், மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 6 மணிமுதல் வெளியூர்களுக்குப் பேருந்துகள் ஓடத்தொடங்கின.
காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டப் பேருந்துகளில், பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்த வழித்தடப் பேருந்துகள் சிலவற்றில் பயணிகள் தகுந்த இடைவெளியின்றி அமர்ந்து சென்றனர்.
மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதிலும் மிகக் குறைந்த அளவிலேயே பயணிகள் செல்கின்றனர். வரக்கூடிய நாள்களில் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, பேருந்து சேவை அதிகரிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல்வெப்ப பரிசோதனைசெய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கோயம்பேடு பேருந்து நிலையமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதையும் படிங்க: 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!