ETV Bharat / city

சீன அதிபர், இந்தியப் பிரதமர் வருகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பில் காவல் துறை! - சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருகை

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிர பாதுகாப்பில் காவல்துறை
author img

By

Published : Oct 10, 2019, 2:38 PM IST

Updated : Oct 11, 2019, 12:04 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் மட்டும் 7,500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குதிரைப் படைகள், 24 மோப்ப நாய்கள் மாமல்லபுரத்தில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 34 ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய குழுவும் பாதுகாப்பு மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவிலிருந்து அலுவலர்கள், 150 பேர் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். சீன பாதுகாப்பு அலுவலர்களும் டெல்லியிலிருந்து வருகை தந்துள்ள மத்திய பாதுகாப்பு குழுவினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். மாமல்லபுரத்தில் மட்டும் 800 கண்காணிப்பு படக்கருவிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.

நெதர்லாந்து அரசர், அரசி இந்தியா வருகை

சென்னையில் ஜி ஜின்பிங் பயணம் செய்யும்போது, அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் சீனாவின் ஹோங்கி நிறுவனம் தயாரித்த நான்கு லிமோசின் எல் 5 ரக வாகனங்கள், தனி விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கும் ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் கண்காணிப்பிற்காக காவல்துறையினர் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விடுதியின் உள்ளே, வெளியே என மொத்தம் 200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோடி - ஷி ஜின்பிங்கை வரவேற்கும் பேரணி

பத்துக்கும் மேற்பட்ட நுண்ணறிவுப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிபர் தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படக்கருவிகளும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தனிக்குழு மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும், மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 22 கிராமங்களில் உள்ள மீனவர்கள், சீன அதிபர் வந்து செல்லும் நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்பகுதிகள் முழுவதும் சீன, இந்தியக் கப்பல் படையைச் சேர்ந்த மூன்று கப்பல்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சீன அதிபர், இந்திய பிரதமர் வருகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பில் காவல்துறை

இது தவிர ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியிலிருந்து சீன அதிபர் பயணிக்கும் வழியில், 100 மீட்டருக்கு இரு காவலர்கள் எனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கென வழி நெடுகிலும் தற்காலிக கண்காணிப்பு மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சீன அதிபரை வரவேற்கும் விதமாக ஐடிசி கிராண்ட் சோழா விடுதியில் சிறப்பு நுழைவாயில் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

Intro:Body:*சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பில் சென்னை*

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் மட்டும் 7500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குதிரைப் படைகள் மற்றும் 24 மோப்ப நாய்கள் மாமல்லபுரத்தில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 34 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவும் பாதுகாப்பு மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவில் இருந்து அதிகாரிகள் 150 பேர் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். சீனா பாதுகாப்பு அதிகாரிகளும், டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள மத்திய பாதுகாப்பு குழுவினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் மட்டும் 800 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.

சென்னையில் ஜி ஜின்பிங் பயணம் செய்யும்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கும் சீனாவின் ஹோங்கி நிறுவனம் தயாரித்த 4 லிமோசின் எல் 5 ரக வாகனங்கள் தனி விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கும் ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் கண்கானிப்பிற்காக போலீசார் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, விடுதியின் உள்ளே, வெளியே என மொத்தம் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதியில் பொருத்தப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட கேமராக்களும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தனிக்குழு மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 22 கிராமங்களில் உள்ள மீனவர்கள் சீன அதிபர் வந்து செல்லும் நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்பகுதிகள் முழுவதும் சீன மற்றும் இந்திய கப்பல் படையை சேர்ந்த மூன்று கப்பல்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் இருந்து சீன அதிபர் பயணிக்கும் வழியில் 100 மீட்டருக்கு இரு காவலர்கள் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணிக்கென வழி நெடுக தற்காலிக கண்காணிப்பு மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சீன அதிபரை வரவேற்கும் விதமாக ஐடிசி கிராண்ட் சோழா விடுதி நுழைவாயிலில் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.Conclusion:
Last Updated : Oct 11, 2019, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.