ETV Bharat / city

மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறினால் முழு கட்டணம் - யுஜிசி அறிவிப்பு - கல்லூரிகளை விட்டு வெளியேறினால் முழு கட்டணம்

கல்லூரிகளை மாணவர்கள் விட்டு வெளியேறி, வேறு கல்லூரிகளுக்கு மாறினால் அவர்களுக்கு முழு கட்டணத்தை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யூஜிசி அறிவித்துள்ளது.

யுஜிசி அறிவிப்பு
யுஜிசி அறிவிப்பு
author img

By

Published : Aug 3, 2022, 1:22 PM IST

சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறுக்கல்லூரியில் சேர்வதற்காக தற்போது பயிலும் நிறுவனங்களில் இருந்து அக்.31ஆம் தேதிக்குள் வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கான முழு கட்டணத்தையும் அக்கல்வி நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) செயலாளர் ராஜ்நிஷ்ஜெயின், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இன்று (ஆக.3) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,"பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறுக்கல்லூரியில் சேர்வதற்காக தற்போது பயிலும் நிறுவனங்களிலிருந்து வரும் அக். 31ஆம் தேதிக்குள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் அக்கல்வி நிறுவனங்கள் மாணவருக்கு திருப்பி அளிக்க வேண்டும்.

மேலும், மாணவர்கள் தாங்கள் சேர்க்கையை ரத்து செய்யும்போது அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் முழுவதுமாக அளிக்க வேண்டுமே தவிர, ரத்து செய்ததற்காக தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அடுத்ததாக CUET, JEE போன்ற பொது நுழைவுத் தேர்வுகள் காலதமாதமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ள தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

எனவே, அவர்கள் அக். 31ஆம் தேதிக்குள் கல்லூரியை விட்டு வெளியேறினால் முழுத்தொகையையும் திருப்பி அளிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் தாமதமாக அதாவது டிச. 31ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் சேர்க்கையை ரத்து செய்தால் மட்டுமே அவர்களிடம் சேர்க்கை பணிக்கான கட்டணமாக 1000 ரூபாய் மட்டும் பிடித்தம் செய்ய வெண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 13 வயதில் 56 நிறுவனங்களுக்கு சிஇஓ - வளர்ந்து வரும் மார்க் ஸக்கர்பர்க்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.