ETV Bharat / city

தகவல் தர மறுப்பு - பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை!

சென்னை: அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளாக தகவல் தர மறுத்த பொது தகவல் அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

information comm
information comm
author img

By

Published : Nov 30, 2020, 1:06 PM IST

கடந்த 2005 ஆம் ஆண்டு அரசிடம் இருந்து குறப்பிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் தகவலை பெறுவதற்கு வசதியாக, தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தகவல்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அற்பத்தனமான காரணங்களை கூறியும், முரண்பாடான தகவல்கள் வழங்கியும் ஆண்டுக் கணக்கில் அலைக்கழிக்க வைப்பதாக செயற்பாட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், விழப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் உள்ள தென்கோடி பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை கேட்டு, வழக்கறிஞர் அசோக் குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தகவல்கள் பெற மனு செய்திருந்தார். ஆனால், பல காரணங்கள் கூறி, தகவல்கள் வழங்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் அலைக்கழித்ததால், இதுகுறித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம், மனுதாரர் கேட்ட தகவல்களை வழங்க பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்தாமல் அலுவலர் மீண்டும் தகவல்கள் தர மறுத்ததால், மனுதாரரான அசோக் குமார், மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம், தகவல்கள் அளிக்காத பொது தகவல் அலுவலருக்கு அபராதமும், துறைரீதியான நடவடிக்கையும் ஏன் எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தகவல் ஆணையத்தின் கேள்விக்கு பொது அதிகாரி தரப்பில் போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், தகவல்கள் தர மறுத்த வானூர் வட்டத்துக்கான பொது தகவல் அலுவலருக்கு (தற்போது மரக்காணம் வட்டார தாசில்தாராக உள்ளார்) 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் ரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.