சென்னை: சென்னையில் முதல் முறையாக சமஸ்கிருதத்தில் தயாரிக்கப்பட்ட யானம் என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவண படத்தை வினோத் மங்காரா இயக்கி உள்ளார். இந்தப் படத்தை ஏவியே ப்ரோடெக்ஷன் தயாரிப்பாளர் ஏவி அனுப் தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படம் மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது குறித்து சமஸ்கிருத மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவண படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் சோமநாத் உள்ளிட்ட ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் பார்த்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத், 'முதல் முறையாக சமஸ்கிருத மொழியில் அறிவியல் சார்ந்த வரலாற்று ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மங்கள்யான் செயற்கைக்கோள் ஏவப்பட்டது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மொழியில் அறிவியல் குறித்து வரலாற்று ஆவணம் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் நாம் சுலோகங்கள் கூறுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். சமஸ்கிருதத்தில் மருத்துவம், வானிலை, பூலோகம் உள்ளிட்டவை குறித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இயக்குநர் வினோத் மங்கரா கூறும்பொழுது, "இது 680 வது ஆவணப்படம் . இது உலக சாதனை. மேலும் தனக்கு சமஸ்கிருதத்தின் மீது உள்ள ஆர்வத்தால் இந்த படத்தை எடுத்தேன். இந்தப் படத்தை தொடர்ந்து வரவுள்ள ஆவணப்பட கண்காட்சிகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னைக்கு இன்று பிறந்த நாள்