ETV Bharat / city

'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அனைத்தும் அறிந்த லெஜண்ட் என அவரைச் சந்தித்த பிறகு இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார்.

rajini
rajini
author img

By

Published : Feb 29, 2020, 12:16 PM IST

தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் டெல்லி கலவரத்தைக் கண்டித்தும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறினார். மேலும், டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.

இந்தச்சூழலில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர், ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அபுபக்கர், ரஜினிகாந்திடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

ரஜினியுடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அபுபக்கர், "நீண்டகால குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் ரஜினியைச் சந்தித்தேன். டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு அவரிடம் நன்றி தெரிவித்தேன்.

’ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்’

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாம் சொல்லிக் கொடுத்து ரஜினிக்கு தெரிய வேண்டியது இல்லை. அவர் அனைத்தும் அறிந்தவர். அவர் ஒரு லெஜண்ட். அதுமட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவரும், தொப்புள் கொடி உறவுகள் என்பதும் பொருளாதாரத்தில் நாடு சிறப்பாக வரவேண்டும் என்பதே ரஜினியின் எண்ணமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிஏஏ எதிர்ப்பு: மோடி, ஷா உருவப்படத்தை கிழித்தெறிந்த மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.