லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் பூந்தமல்லியில் நடைபெற்றுவந்த ’இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அழைப்பாணை அனுப்பி விசாரித்தனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில், நிகழ்விடத்தில் விபத்து நடந்தது குறித்து நடித்துக் காட்டும்படி, மத்தியக் குற்றப்பிரிவு தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இது தொடர்பாக நீதிபதி இளந்திரையன் முன் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் தேதி இரவு நடந்த படப்பிடிப்பின்போது திடீரென கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலைப்பிரிவு உதவியாளர் சந்திரன், தயாரிப்புப் பிரிவு உதவியாளர் மது ஆகியோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருணாசின் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு!