ETV Bharat / city

'காஷ்மீர் பிரச்னை... பெரிய விபரீதமாகப் போகிறது' - வைகோ எச்சரிக்கை

சென்னை: காஷ்மீர் பிரச்னை இந்தியாவை பெரிய விபரீதத்தில் சிக்கவைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

vaiko
author img

By

Published : Aug 3, 2019, 2:00 PM IST

Updated : Aug 3, 2019, 5:12 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "காஷ்மீரில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலைமை கற்பனை செய்ய முடியாத விபரீதத்தில் இந்தியாவை சிக்கவைக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. காஷ்மீர் பிரச்னையை தீர்க்க, அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் நேற்று மீண்டும் கூறியிருந்தார். ஐநா மனித உரிமை ஆணையத்தில் காஷ்மீர் பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்" என்று தெரிவித்தார்.

அமர்நாத் யாத்திரைக்கு தடை விதித்ததோடு சுற்றுலாப் பயணிகளும் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வைகோ, அங்கு அதிகளவு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அப்படியானால் காஷ்மீர் மக்கள் எங்கே போவார்கள் என்றும், அரசியல் சட்டத்தில் 35ஆவது பிரிவை மத்திய அரசு நீக்க முயற்சி செய்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, காஷ்மீர் மன்னராக இருந்த ஹரிசிங் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு காலில் மிதித்துவிட்டு காஷ்மீரின் உரிமைகளை பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்க உள்ளதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை வேதனையுடன் சுட்டிக்காட்டிய வைகோ, கொசாவோ பிரச்னை போன்று ஐநாவுக்கு காஷ்மீர் பிரச்னையும் வரக்கூடும் என்று கவலை தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, வேலூர் தொகுதியில் தோல்வியடைய உள்ளதால் அதிமுகவினர் எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செயல்படுவதாக வைகோ தெரிவித்தார்.

Intro:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமானநிலையத்தில் பேட்டி

காஷ்மீரில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலைமை கற்பனை செய்ய முடியாத விபரீதத்தில் இந்தியாவை சிக்கவைக்கும் என்ற கவலை ஏற்படுகிறது

காஷ்மீர் பிரச்சனையில் நடுநிலையாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா உதவி செய்யும் என்று அந்த நாட்டு அதிபர் கூறியபோது வெளிநாட்டு தலையீடு இருக்ககூடாது என்பது இந்திய தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது

அமர்நாத் யாத்திரைக்கு தடை விதித்ததோடு சுற்றுலா பயணிகளும் வெளியேற வேண்டும் என்று ஆளுநர் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசியல் சட்டத்தில் 35 பிரிவை நீக்க முயற்சி செய்கிறதா இந்திய அரசு கேள்வி எழுப்பிள்ளது காஷ்மீர் பிரச்சினை முகவும் கவலையளிக்கக் கூடிய பிரச்சினையாக மாறலாம்

அதிமுக ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் தோல்வி அடையப்போகிறது அதனால் எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக அதிமுக இவ்வாறு செயல்படுகிறது

Conclusion:
Last Updated : Aug 3, 2019, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.