சென்னை: விமான நிலையத்தில் மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக் பிளாண்ட் தொடங்கி வைக்க உள்ளேன். தமிழ்நாட்டிற்கு ரூ.6500 கோடி மூதலீடு வந்து உள்ளது. இதன் முலம் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்கள் எலக்ட்ரானிக் தொழில்களில் வேகமாக வளர்ந்து வருகின்றன. பிரதமர் மோடி பதவி ஏற்ற போது 87 சதவீதம் செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
செல்போன் தயாரிப்பில் உலகத்தில் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. தமிழ்நாட்டில் இது 5ஆவது தொழிற்சாலை, இது பிரதமர் மோடியின் வளர்ச்சி மாடல் ஆகும். அடுத்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். ரூ. 30 ஆயிரம் கோடி வரை முதலீடு உயரும். பிரதமர் மோடியின் முயற்சியால் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் என கூறி உள்ளது. இந்தியாவில் 2020ல் ரூ.50 ஆயிரம் கோடி செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதால் முதலீடு செய்ய பலர் வருகின்றனர்.பிரதமர் மோடி அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் செயல்படுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு நிறுவனத்தில் +2 படித்தவர்களுக்கு வேலை...