ETV Bharat / city

பிரபல ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை - வருமான வரித்துறை சோதனை

பிரபல ஜவுளி நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோருக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

it raid in saravana store
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
author img

By

Published : Dec 1, 2021, 1:56 PM IST

சென்னை: பிரபல ஜவுளி நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 1969ஆம் ஆண்டு செல்வரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்டு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சூப்பர் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 8.30 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை நடைபெறும் இடங்கள்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான தி.நகர் ரங்கநாதன் தெரு சரவணா செல்வரத்தினம் துணிக்கடை, தி.நகர் ரங்கநாதன் தெரு சூப்பர் சரவணா ஸ்டோர் துணிக்கடை, தி நகர் ரங்கநாதன் தெரு சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, தி.நகர் ரங்கநாதன் தெரு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை சரவணா செல்வரத்தினம் துணிக்கடை, தி நகர் லஷ்மண் தெரு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனர் ராஜரத்தினம் வீடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பர்னிச்சர் கடை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை, போரூர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, மதுரை அழகப்பன் நகரில் உள்ள சரவணா செல்வரத்தினம் துணிக்கடை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

100க்கும் அதிகமான அலுவலர்கள் சோதனை

கோவையில் சரவணா செல்வரத்தினம் கடையில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். வரி ஏயிப்பு புகார் தொடர்பாக இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக வருமானத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறை சோதனை

மேலும் கடைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதால் கடைக்கு வரக்கூடிய பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடை ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வெளியே காத்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு லெஜண்ட் சரவணா ஸ்டோர்சில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரபல வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.