தமிழ்நாடு முழுவதும் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர சோதனை நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், வருமானவரித் துறையினர் நேற்று கரூரில் மூன்று இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னையில் மூன்று இடங்களிலும், நாமக்கல்லில் ஏழு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
மேலும், நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரராக இருக்கும் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்துவருகிறது. அதேபோல் சென்னையைச் சேர்ந்த பைனான்சியர்கள் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இப்படி சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் வருமானவரித் துறையினர் ஒரேநேரத்தில் சோதனை நடத்தப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.