ETV Bharat / city

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
author img

By

Published : Jul 22, 2021, 7:33 AM IST

Updated : Jul 22, 2021, 9:18 AM IST

07:29 July 22

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய சுமார் 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு வந்துள்ளது.

அதன் அடிப்படையில். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று (ஜூலை 22) காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

குறிப்பாக கரூர் மாவட்டத்தில், அவருக்கு சொந்தமான 20 இடங்களிலும், சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் என மொத்தம் 21 இடங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர், சோதனை நடத்தி வருகின்றனர்.  

இதில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமசந்திரன் தலைமையிலான காவல் துறையினர், சென்னையில் உள்ள  அவரது வீட்டில் இன்று (ஜூலை 22) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பிஆர்க் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம்

Last Updated : Jul 22, 2021, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.