ETV Bharat / city

கல்கி பகவான் மகன் வருமான வரித்துறையில் ஆஜர்!

சென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கல்கி பகவானின் மகன் மற்றும் மருமகள் ஆஜராகினர்.

Income Tax Officer investigation to Kalki Bhagavan's son
author img

By

Published : Oct 22, 2019, 6:12 PM IST

கடந்த 16ஆம் தேதியிலிருந்து ஆறு நாட்கள் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் 44 கோடி ரூபாய் இந்திய பணம், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம், ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 4000 ஏக்கர் அளவிற்கு நிலங்கள் வாங்கி விற்றதும், சோதனையில் அம்பலமானது.

குறிப்பாக ஆசிரமத்திற்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விளையாட்டுகளில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவித்ததும் தெரியவந்துள்ளது. ஆஸ்ரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணக்காரர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையை குறைத்துக்காட்டி ,அந்த பணத்தை சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்து முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்கி பகவான் அவரது மனைவியின் பெயரில் அம்மா பகவான் ஆசிரமம் என்ற ஆஸ்ரமம் அமைத்து அதற்காக நிதி வசூலித்தாகவும், கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் ப்ரீத்தா ஆகியோர் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணா, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் ரகசியமாக நிறுவனங்கள் ஆரம்பித்து வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி பகவான் மகன் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்!

வருமான வரி சோதனையின்போது கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ப்ரீத்தாவிடம் விசாரணை நடத்தப்பட்ட போது முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் பிரீத்தா ஆகியோர் இன்று காலை ஆஜராகினர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள், சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான பத்திரங்கள் ஆகியவற்றை வைத்து தனித் தனியாக இருவரிடமும் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் இருவரிடமும் வாக்குமூலம் பெற்று, அடுத்த கட்டமாக கல்கி பகவான் மற்றும் அம்மா பகவானிடம் விசாரணை நடத்த வருமான வரி புலனாய்வுத் துறை முடிவு செய்துள்ளது.

Intro:Body:*சென்னை - கல்கி பகவான் மகன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்*

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கல்கி பகவானின் மகன் மற்றும் மருமகள் ஆஜராகி உள்ளனர்.

கடந்த 16 ஆம் தேதியிலிருந்து 6 நாட்கள் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் 44 கோடி ரூபாய் இந்திய பணம், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம், ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 4000 ஏக்கர் அளவிற்கு நிலங்கள் வாங்கி விற்றதும் , சோதனையில் அம்பலமானது.

குறிப்பாக ஆசிரமத்திற்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விளையாட்டுகளில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவித்ததும் தெரியவந்துள்ளது. ஆஸ்ரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணக்காரர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையை குறைத்துக்காட்டி ,அந்த பணத்தை சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்து முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்கி பகவான் அவரது மனைவியின் பெயரில் அம்மா பகவான் ஆசிரமம் என்ற ஆஸ்ரமம் அமைத்து அதற்காக நிதி வசூலித்தாகவும், கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் ப்ரீத்தா ஆகியோர் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணா, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் ரகசியமாக நிறுவனங்கள் ஆரம்பித்து வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சோதனை யின்போது கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ப்ரீத்தாவிடம் விசாரணை நடத்தப்பட்ட போது முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் பிரீத்தா ஆகியோர் இன்று காலை ஆஜராகி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள், சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான பத்திரங்கள் ஆகியவற்றை வைத்து தனித் தனியாக இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் இருவரிடமும் வாக்குமூலம் பெற்று, அடுத்த கட்டமாக கல்கி பகவான் மற்றும் அம்மா பகவானிடம் விசாரணை நடத்த வருமான வரி புலனாய்வு துறை முடிவு செய்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.