வருமான வரிச் சட்டம் 1961இன்கீழ் 2021-2022 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல், பல்வேறு தணிக்கை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் வரி செலுத்துவோர், இதர பங்குதாரர்களுக்கு பல சிரமங்கள் உள்ளன.
இதனைக் கருத்தில்கொண்டு, 2021-2022 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல், பல்வேறு தணிக்கை அறிக்கைகளுக்கான கடைசி தேதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.
விவரங்கள் வருமாறு
1. 2021-2022 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல்செய்வதற்கான கடைசி தேதியாக 2021 ஜூலை 31ஆம் தேதியிலிருந்து, செப்டம்பர் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது டிசம்பர் 31ஆம் தேதிவரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. 2020-2021ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையைத் தாக்கல்செய்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 15ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. சர்வதேச பரிவர்த்தனை அல்லது சட்டத்தின் 92ஈ பிரிவின்கீழ் குறிப்பிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட நபர்கள் 2020-2021ஆம் ஆண்டிற்காகச் சமர்ப்பிக்க வேண்டிய கணக்காளரிடமிருந்து பெற்ற அறிக்கைக்கான கடைசி தேதி 2021 அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து நவம்பர் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வருமான வரி தளத்தில் தொடர் தொழில்நுட்பக் கோளாறு: நிதி அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ள இன்ஃபோசிஸ் சிஇஓ