ETV Bharat / city

குட்கா பரிசோதனை செய்த போலி போலீஸார்; ரூ.75,000 பணம் நகை அபேஸ்!

போலீஸார் என்று கூறிக்கொண்டு, குட்கா சோதனைக்கு வந்திருப்பதாக ரூ.75,000 பணம் மற்றும் 6 பவுன் நகையைக் கொள்ளையடித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை சூலூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு வலைவீசித் தேடி வருகின்றனர்.

போலி போலீஸார்
போலி போலீஸார்
author img

By

Published : Jun 2, 2022, 2:11 PM IST

கோவை: சூலூர், வெங்கடாசலம் நகரில் மளிகைக்கடை வைத்திருப்பவர் கவியரசன். இவரது தம்பி சிவா மற்றும் அம்மா திலகம் ஆகியோர் கடையில் வியாபாரத்தைக் கவனித்து வருகின்றனர். இவர்கள் கடைக்கு எதிரி உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் கடைக்கு கடந்த திங்கள்கிழமை (மே30) மாலை வெள்ளை நிற கார் ஒன்றில் 4 பேர் கொண்ட கும்பல் தங்களை போலீஸ் என்று கூறி வந்துள்ளனர். பின்னர், கடையில் குட்கா பொருள்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது; எனவே, உங்கள் கடையை சோதனை நடத்தவேண்டும் எனக் கூறியுள்ளனர்.
போலியான போலீஸார் செய்த சோதனை: இதனைத் தொடர்ந்து, காரில் ஒருவர் மட்டும் அமர்ந்த நிலையில் மீதமுள்ள 3 பேரும் கடைக்குள் சென்று சோதனை செய்தனர். அவர்கள் சோதனை நடத்தியதில், குட்கா எதுவும் கிடைக்காத நிலையில், உங்களின் வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது கடையில் இருந்த சிவா மற்றும் திலகம் ஆகியோரிடம் உண்மையான போலீஸார் பரிசோதனை செய்வதைப் போலவே, செல்போனைப் பறித்து வைத்துக்கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர்.

.
.
காரில் தப்பித்து சென்ற 3 பேர் கும்பல்: கடையைத் தொடர்ந்து வீட்டிலும் எதுவும் கிடைக்காததால், சிவாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் ஓட்டி வந்த வெள்ளை நிறக் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றவுடனே, ஆமா.. இவன ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகணும்னு கூட்டிட்டு வந்தாச்சு; நமக்கெங்கே ஸ்டேஷன் உள்ளது, கிடைத்தது போதும். அப்புறம் இவன என்ன பண்றது என எண்ணிக்கொண்டு, நடு வழியிலேயே சிவாவை இறக்கிவிட்டுள்ளனர்.

ரூ.75,000 மற்றும் 6 பவுன் நகை கொள்ளை: என்ன நடக்கிறது? என்று புரியாத சிவா, வீட்டிற்கு சென்ற பின்னர் நடந்தவற்றை தனது தாயிடம் விளக்கினார். அதற்கு முன்பே அவருக்கு அவரது தாய் மற்றொரு ஷாக்கான விடயத்தைக் கூறினார். அது, வீட்டில் பணம் வைத்திருந்த பையைப் பார்த்தபோது, அதிலிருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 75,000 ஆகியவற்றை, போலீஸார் எனக்கூறி வந்தவர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்பதுதான்.

சூலூர் காவல் நிலையத்தில் புகார்: பின்னர் சிவா, உடனடியாக நடந்தவை குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன் தலைமையிலான போலீஸார் அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளைச் சேகரித்து போலீஸ் வேடத்தில் கொள்ளையடிக்கும் கும்பலைத் தேடி வருகின்றனர்.

சூலூர் போலீஸார் தீவிர விசாரணை
சூலூர் போலீஸார் தீவிர விசாரணை

முன்னதாக இதேபோல, இந்த கும்பல் கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை என்ற பெயரில் ரூ.2000 என வசூல் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளாது. போலீஸார் என்ற பெயரில் போலியான வேடத்தில் உலா வரும் இந்த கும்பலால் பெரியளவில் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்குள், அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று அப்பகுதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுமாதிரியான குழப்பங்களைத் தடுக்க: பொதுமக்கள் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் உயர் பதவியிலுள்ள காவல் அலுவலர்கள் குறித்து தெரிந்துகொள்ளாவிடினும், காவல்நிலையத்தின் தொடர்பு எண்களை மட்டுமாவது தெரிந்து வைத்திருப்பது அவசியம். யாரேனும் தங்களை போலீஸார் என்று கூறிக்கொண்டு, வரும் பட்சத்தில் உண்மையை அறிந்துகொள்வதற்கும்; தங்களின் உடைமைகளை அவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவும் இயலும். எனவே, அருகிலுள்ள காவல்நிலையத்தின் தொடர்பு எண்களை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: இளையராஜா எனும் இசை தூதன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.