ETV Bharat / city

சென்னையில் 5.16 % பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கான முன்னுரிமை அடிப்படையில் 5.16 விழுக்காடு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5.16 சதவீதம் மட்டுமே தடுப்பூசி
5.16 சதவீதம் மட்டுமே தடுப்பூசி
author img

By

Published : Jun 8, 2021, 3:27 PM IST

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 18 வயது முதல் 44 வயதை சேர்ந்தவர்கள் மொத்தம் 35 லட்சத்து 16 ஆயிரத்து 474 பேர் உள்ளனர். அதில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆம் தேதி நிலவரப்படி, 1 லட்சத்து 86 ஆயிரத்து 553 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மொத்த எண்ணிக்கையில் 5.16 % பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 21,585 நபர்களுக்கும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 7,267 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாகவே குறைந்தளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 5.16 % பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி
சென்னையில் 5.16 % பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி
இதேபோல் 15 மண்டலங்களில் 45 வயதுக்கு மேல் 20,45,447 நபர்கள் உள்ளனர். 5 ஆம் தேதி நிலவரப்படி 13,26,080 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 5,84,021 பேருககும் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.