சென்னை ராயப்பேட்டை தெய்வ சிகாமணி தெருவில் தனியார் நிறுவன கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதில் நண்பர்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் (20), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முல்லைநாதன் (22) ஆகிய இவரும் சென்னையில் தங்கி வேலை செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இருவரும் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தகராறாக மாறியதில் ஆத்திரமடைந்த முல்லைநாதன், செல்வத்தை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயப்பேட்டை காவல் துறையினர் செல்வத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முல்லைநாதனை வலைவீசி தேடிவருகின்றனர்.