சென்னையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதாக கூறி, இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதுகுறித்து நீதிபதிகள் தெரிவிக்கையில், அரசு அலுவலர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, ஆக்கிரமித்தாகக் கூறப்படும் கட்டடங்கள் விதிகளின்படியும், அனுமதியின்படியும் அமைவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அனுமதி வழங்க கூடாது.
குறிப்பாக, விதிமீறல் வழக்கில் கட்டடங்களுக்கு சீல் வைத்தப்பின், அதுதொடர்பான மேல் முறையீடு உத்தரவுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பின்பற்றுவதில்லை.
நீதிமன்ற உத்தரவுகளை பற்றி கவலைப்படாமல், கடமையை செய்யத் தவறும் அலுவலர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பதவிகளை பறிக்க வேண்டும். அபராதம் விதிப்பது, இரண்டாம் கட்டம். அவர்களை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கு வாதங்கள் முடிந்த நிலையில், மீண்டும் விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபாரம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், சென்னை திருவேற்காட்டில் உள்ள பசு மடத்துக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? - ஸ்டாலின் தீவிர ஆலோசனை