மகாராஷ்டிராவில் ஊரடங்கு
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதால் மகாராஷ்டிராவில் 15 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்தநாள்
இந்திய அரசியலமைப்பின் தந்தை என்றழைக்கப்படும் பாபா சாகேப் அம்பேத்கரின் 130ஆவது பிறந்தாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு
சித்திரைத் திருநாளின் முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

கேரளா புத்தாண்டு
'கேரளா விஷு பண்டிகை' என்றழைக்கப்படும் கேரளா புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது.

ஐபிஎல் இன்றைய ஆட்டம்
நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 6ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் எதிர்கொள்கிறது.
