9 மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி குழு துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்று விநியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு அடுத்த மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணி முதல் இணையதளம் மூலம் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் ரிலீஸ்
நடிகர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மழை பெய்யக்கூடிய பகுதிகள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.