உத்தரகாண்ட் செல்லும் அமித் ஷா
உத்தரகாண்ட் மழை வெள்ள பாதிப்பு நிலவரத்தைக் அறிந்துகொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
இரவுநேர ஊரடங்கு அமல்
மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தை ஒட்டி அறிவிக்கப்பட்ட 10 நாள்கள் தளர்வுகள் முடிவுக்கு வருவதால் இன்று முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் 'பி' - சூப்பர் 12
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப்போட்டிகளில் இன்று (அக். 21) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் 'பி'-யில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதும் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
அதே பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து - ஓமன் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மழை பெய்யக்கூடிய பகுதிகள்
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் - காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.