ETV Bharat / city

அக்டோபர் 18 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday - EtvBharatNewsToday

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.

இன்றைய முக்கியச் செய்திகள்
இன்றைய முக்கியச் செய்திகள்
author img

By

Published : Oct 18, 2021, 6:55 AM IST

1. கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரியில் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ளம் புகுந்த பகுதிகளுக்கு மட்டும் இன்று (அக். 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

2. டாட்டா பன்ச் கார் இன்று அறிமுகம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பன்ச் காரை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று (அக். 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டாட்டா பன்ச் கார்
டாட்டா பன்ச் கார்

3. அண்ணாத்த படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று (அக்.18) வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்ணாத்த பாடல்
அண்ணாத்த பாடல்

4. மழை பெய்யக்கூடிய இடங்கள்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

5. டி-20 இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு பயிற்சி ஆட்டம்

துபாயில் இந்திய நேரப்படி, இன்று இரவு 7:30 மணிக்கு ஐசிசி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று (அக்.18) மோதுகின்றன.

டி20 போட்டி
டி20 போட்டி

6. இன்றுமுதல் 100% விமானங்கள் இயங்க அனுமதி

கரோனா தொற்றுப் பரவலுக்கு எதிராக நாடு போராடும் வேளையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்துவருகின்றன. கடந்தாண்டு மார்ச் மாதம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவை உச்ச வரம்பு இன்றி, முழுத்திறனுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை
விமான சேவை

7. சம்யுக்தா கிசான் மோர்ச்சா சார்பில் ஆர்ப்பாட்டம்

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொலை செய்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவைக் கைதுசெய்யக் கோரி இன்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

லக்கிம்பூர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.