சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மீதான விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப். 9) காவல் துறை, தீயணைப்புத் துறை, மீட்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்கவுள்ளார்.
![சட்டப்பேரவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13010914_stalin.jpg)
கவிஞர் புலமைப்பித்தனுக்கு இறுதிச்சடங்கு
அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவால் நேற்று (செப். 8) உயிரிழந்தார். அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட நிலையில் இன்று (செப். 9) இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.
![புலமைப்பித்தன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13010914_kavingar.jpg)
டெல்டா பரவலைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்கள்
டெல்டா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான செயல்திட்டங்கள் குறித்து இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிக்கவுள்ளார்.
![ஜோ பைடன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13010914_jo.jpg)
திரையரங்குகளில் ரிலீசாகும் லாபம் திரைப்படம்
இயற்கை, ஈ, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய மறைந்த எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் திரைப்படம் இன்று (செப். 9) திரையரங்குகளில் வெளியாகிறது.
![லாபம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13010914_labam.jpg)
அருண் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
![அருண் விஜய், ஹரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13010914_arunvijay.jpg)
இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்
ரியல்மி நிறுவனம் தற்போது 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![ரியல்மி ஸ்மார்ட்போன்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13010914_s.jpg)
தமிழ்நாட்டில் மழை
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக இன்றுமுதல் செப்டம்பர் 12ஆம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![மழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13010914_malai.jpg)