ETV Bharat / city

மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் நிலை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
court
author img

By

Published : Aug 26, 2020, 4:31 PM IST

இது தொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்துள்ள மனுவில், ” மத்திய அரசு கடந்த 2007 ஆம் ஆண்டு கொண்டுவந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு விதிகளை வகுத்தது.

மகன்களால் கைவிடப்பட்ட பெற்றோரிடம் இருந்து புகார்களை பெற மண்டல வருவாய் அதிகாரிக்கு இந்த சட்டப்பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதால் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் ” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து சமூக நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையை பசுமையாக்க 'சைக்கிள்ஸ் 4 சேஞ்ச் சேலஞ்ச்' போட்டி: ஆணையர் அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.