ETV Bharat / city

நிவர் புயல் பாதிப்பு: தாம்பரம் பகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு - நிவர் புயல்

சென்னை : நிவர் புயல் வெள்ளத்தில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாம்பரம் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று (நவ.27) நேரில் ஆய்வு செய்தார்.

Impact of Nivar storm: Minister  Pandiyarajan inspects Tambaram area
நிவர் புயல் பாதிப்பு: தாம்பரம் பகுதியில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆய்வு
author img

By

Published : Nov 27, 2020, 10:21 PM IST

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கோரதாண்டவம் ஆடி, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த புயலால் மழை கொட்டி தீர்த்ததுடன், பலத்த காற்று காரணமாக வாழை மரங்கள், குடிசைவீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த புயல் காரணமாக சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

தாம்பரம் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர் பாண்டியராஜன், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். மண்ணிவாக்கம், வரதராஜபுரம் அஷ்டலட்சுமி நகர், ராயப்பா நகர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றையும் வெள்ளம் சுழ்ந்த பகுதிகளையும் பார்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்றும் பணி குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதால், அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்பது தவறான கருத்து. ஆற்றில் அதன் இயல்பான கொள்ளளவு ஏழரை அடிக்கு தான் தண்ணீர் செல்கிறது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அதேபோல், 42 கிலோ மீட்டருக்கு அடையாறு ஆற்றின் கரைகள் உயர்த்தப்பட்டு, தடுப்பணைகள் உள்வாங்கி கட்டப்பட்டுள்ளதால் வெள்ள பாதிப்பு ஏற்படாது. இன்னும் சில மணி நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்படும்.

120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலை சாதாரண புயலாக எண்ணி விடக் கூடாது. தமிழ்நாடு அரசின் சிறந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டது.

நிவர் புயல் பாதிப்பு: தாம்பரம் பகுதியில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆய்வு

அடையாறு ஆற்றின் கரை உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தவறான கருத்தை பதிவிடுகிறார். எங்காவது ஒரு இடத்தில் கரை உடைந்ததற்கான ஆதாரத்தை அவர் காண்பித்தால், எனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இந்த சவாலை நான் பகிரங்கமாக விடுகிறேன். மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை பாராட்டுவார்கள். ஆனால், இங்கு மு.க.ஸ்டாலின் எங்களின் நல்ல நடவடிக்கையை பாராட்ட மனமில்லாமல் அறிக்கை விட்டு வருகிறார்.

மேலும், பேரிடர் காலங்களில் மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் தவறான வதந்திகளை பரப்பியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்யலாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : நிவர் புயலால் சேதமடைந்த படகுகளுக்கு அறிக்கையளித்த பின் நிவாரணம் அறிவிக்கப்படும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.