சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு துறை அலுவலகத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றிய செந்தில்குமார், திருமணத்திற்கு முன்பு முத்துலட்சுமி என்பவரும் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
சரண்யா என்பவரை மணமுடித்து, இரண்டரை வயது மகள் இருந்த நிலையிலும், முத்துலட்சுமியுடனான உறவை தொடர்ந்ததால், செந்தில்குமாரை சரண்யா கண்டித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஏழு கிணறு காவல் நிலையத்தில் பதிவான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2019ம் ஆண்டு தீர்ப்பளித்தது . இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
சந்தர்ப்ப சூழல்நிலை அடிப்படையில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாகவும், நேரடி சாட்சியம் இல்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு, சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமே கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அவற்றை சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளதால், ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பி இளம்பெண்ணை கடத்தி திருமணமா?