சென்னை: ஐஐடி-சென்னை ரிசர்ச் பார்க்கில் DICV-IITM இன்குபேஷன் செல் (IITMIC) தொடங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திற்கான மொபிலிட்டி தீர்வுகளை இணைந்து உருவாக்கவும் மற்றும் ஒத்துழைக்கவும் IITMIC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) கையெழுத்திட்டிருக்கிறது.
இது குறித்து ஐஐடி-சென்னை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "போக்குவரத்து துறையில் தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் தீர்வுகளை உருவாக்கவும் மற்றும் அவைகளை சந்தையில் அறிமுகம் செய்யவும் இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒரு செயல்தளத்தை DICV மற்றும் IITMIC வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை – போக்குவரத்தின் எதிர்காலத்திற்கு அவசியமான இடைக்காலத்திலிருந்து, நீண்டகாலம் வரையிலான தீர்வுகளை அடையாளம் காண ஒரு தொழில்நுட்ப மையத்தை நிறுவ டெய்ம்ளர் டிரக் ஏஜி (“டெய்ம்ளர் டிரக்”) நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமான டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (DICV), ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் (IITMIC) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது.
DICV-IITMIC எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த கூட்டுவகிப்பு மையம், சென்னை மாநகரில் அமைந்துள்ள ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், இனி வரவிருக்கும் ஆண்டுகளில் இந்திய போக்குவரத்து துறைக்கான எதிர்காலத்திற்குரிய தீர்வுகளை கண்டறிவதற்காக செயல்படவிருக்கும் இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடையாளம் காணவும், அவைகளுக்கு வழிகாட்டல்களையும், வாய்ப்புகளையும் வழங்கவும் IITMIC உடன் DICV கூட்டாண்மையாக செயல்படும்.
எதிர்கால போக்குவரத்து தீர்வுகளுக்காக IITMIC போன்ற ஒரு கல்வி நிறுவன அமைப்புடன் கூட்டுவகிப்பில் இணைந்திருக்கும் இந்திய போக்குவரத்து துறையின் முதல் மற்றும் ஒரே OEM நிறுவனம் என்ற பெருமையை DICV பெறுகிறது” என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வரும் தீபாவளி முதல் 4 மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம்...