ETV Bharat / city

பாத்திமா லத்தீப் வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி! - ஃபாதிமா லத்தீப் வழக்கு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது தன்னிச்சையான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவர் அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

iit student fathima latheep death case dismissed

author img

By

Published : Dec 13, 2019, 1:38 PM IST

Updated : Dec 13, 2019, 4:00 PM IST

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் நவம்பர் 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோர் கேராளாவில் இருப்பதால் விடுதியில் தங்கி இருக்கும் மனஅழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சகமாணவிகள் தெரிவித்ததாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

இச்சுழலில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் மட்டும் 5 மாணவர்கள் இதேபோல் சந்தேகப்படும்படி மரணித்துள்ளதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இவ்வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பு, விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். அஸ்வத்தமன் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

ஃபாத்திமா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், அதில் சிபிஐ-யில் பணியாற்றிய இருவர் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் அமைப்பு அரசியல் கட்சியை சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஐஐடி தற்கொலைகள்: சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

அப்போது நீதிபதிகள், நடவடிக்கை எடுக்கவில்லை என எப்போது மனு கொடுக்கப்பட்டது என்றும், அதற்கான அத்தாட்சி நகல் எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் நவம்பர் 18ஆம் தேதி புகார் அனுப்பியதாகவும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

மாணவி ஃபாத்திமா செல்போனில் உள்ள தற்கொலைக் குறிப்பு உண்மையானது - தடயவியல் துறை

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி, போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Intro:Body:சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது தன்னிச்சையான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவர் அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் நவம்பர் 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பெற்றோர் கேராளாவில் இருப்பதால் விடுதியில் தங்கி இருக்கும் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் 5 மாணவர்கள் இதேபோல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாலும், தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழக தலைவர் என்.அஸ்வத்தமன் பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், அதில் சிபிஐ-யில் பணியாற்றிய இருவர் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் அமைப்பு அரசியல் கட்சியை சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், நடவடிக்கை எடுக்கவில்லை என எப்போது மனு கொடுக்கப்பட்டது என்றும், அதற்கான அத்தாட்சி நகல் எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் நவம்பர் 18ல் புகார் அனுப்பியதாகவும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி, போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.Conclusion:
Last Updated : Dec 13, 2019, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.