ETV Bharat / city

சென்னை ஐஐடியில் பயோ சிமென்ட் உற்பத்தி கண்டுபிடிப்பு - பயோ சிமென்ட் உற்பத்தி கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பாக்டீரியாவிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பயோ-சிமென்ட்டை உற்பத்தி செய்வதற்கான மாதிரி முறைகளை கண்டறிந்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் பயோ சிமென்ட் உற்பத்தி கண்டுபிடிப்பு

author img

By

Published : Apr 29, 2022, 11:00 PM IST

சென்னை: சிமென்ட் தயாரிக்கும் போது கார்பன்- டை -ஆக்சைடு அதிகம் வெளியேறுவதை குறைக்க, சிமென்ட் தயாரிப்பதற்கான மாற்று செயல்முறைகளை உருவாக்குவது இன்றியமையாததும், கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநா காலநிலை மாற்ற மாநாட்டின் போது, சுமார் 140 நாடுகள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்தன.

சிமென்ட் உற்பத்தி மிகப்பெரிய கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தி செய்யும் தொழில்களில் ஒன்றாகும். இதனை குறைப்பதற்கு பயோ சிமென்ட் உற்பத்தி பயனுள்ளதாக அமையும்.

பயோ சிமென்ட் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு குறித்து, சென்னை ஐஐடியின் பயோடெக்னாலஜி துறையின் சுரேஷ்குமார் கூறும்போது, ”பயோ சிமென்ட் பயன்படுத்தி விரிசல்களை அடைத்தல், மண்ணின் கட்டமைப்பை ஒருங்கிணைத்தல், குடிநீரில் உள்ள கன உலோகங்கள் மற்றும் ரேடியன் நியூக்ளைடுகளை அகற்றுதல் போன்றவற்றை சுயமாக சரிசெய்யும் சிமென்ட் ஆகும்.

சென்னை ஐஐடியில்   பயோ சிமென்ட் உற்பத்தி கண்டுபிடிப்பு
சென்னை ஐஐடியில் பயோ சிமென்ட் உற்பத்தி கண்டுபிடிப்பு

எதிர்காலத்தில் வழக்கமாக பயன்படுத்தும் சிமென்ட் தயாரிப்பதற்கும் இந்த தொழில் நுட்பம் உதவியாக இருக்கும். பாக்டீரியாக்களை பயன்படுத்தி தூண்டப்பட்ட கால்சைட் பிரித்தெடுத்தல் (MICP) முறையால், கால்சியம் கார்பனேட் படிவுகள் உருவாகும் செயல்முறையாகும்.

இந்த முறையால் பாக்டீரியாக்களை பயன்படுத்தி பயோ-சிமென்ட் தயாரிக்கப் பயன்படுகின்றன. பயோ-சிமென்ட் அதிக ஆற்றல் திறன் கொண்டது. ஏனெனில் இதற்கு 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது.

ஆனால் வழக்கமான சிமென்ட் உற்பத்திக்கு 900⁰Cக்கு மேல் தேவைப்படுகிறது. பயோ-சிமென்ட் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. அது மிகக் குறைவான கார்பன்- டை- ஆக்சைடு வெளியேற்றத்தைக் கொண்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதற்கான செலவும் குறைவாக இருக்கிறது. எனவே வேகமாக உற்பத்தி செய்ய முடியும்.மேலும், பயோ-சிமென்ட் வலிமை, நீடித்துழைப்பு மற்றும் குறைக்கப்பட்ட நீர் உறிஞ்சுதல் திறன் மற்றும் ஊடுருவல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மான்கள் இறப்பு- செய்திக்கு மறுப்புத் தெரிவித்த ஆளுநர் மாளிகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.