சென்னை: நிதிசார் உள்ளடங்கலில் உள்ள சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி டிவிஎஸ் கேப்பிடல் பண்ட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோபால் சீனிவாசன், டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த ஆய்வறிக்கையில், இறுதி நிலையில் உள்ள வாடிக்கையாளர்களையும் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களை சென்றடைவதற்கு மளிகை கடை உரிமையாளர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற தொழில் செய்யும் தனிநபர்களை பிசினஸ் முகவர்களாக செயல்பட அனுமதிப்பதன் மூலம் எளிதாக பணத்தை போடவும் பணத்தை எடுக்கவும் (கேஷ் இன் கேஷ் அவுட்) வசதி செய்ய வேண்டும்.
பணப்பரிவர்த்தனை வரம்பு காண இலவச எண்ணிக்கையை அதிகரிப்பது குறைந்தபட்ச தொகை இல்லாத நிலையில் கட்டணம் வசூல் செய்வது எஸ்எம்எஸ் போன்ற செய்திகளுக்கு வங்கி சேவை கட்டணங்கள் வசூலிப்பது போன்றவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். வருமான வரி தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்வதால் வருமானவரி கணக்குகளை அவர்கள் தாக்கல் செய்வது அவசியமாக இருக்கிறது.
சேமிப்பு திட்டங்களில் நெகிழ்வு திறன் இல்லாதது பிரச்சனையாக இருக்கிறது. மொழி கலாச்சாரம் சார்ந்த தடைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு வங்கியில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிரமமாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி,
நிதி சார்ந்த நடவடிக்கைகளில் உள்ள சவால்கள் குறித்த ஆய்வறிக்கை இன்று(ஜூன் 14) வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் வரவு செலவு பணப்புழக்கம் உள்ளிட்டவை குறித்து நிதி செயல்பாடுகள் அமைந்துள்ளன. டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் கிராமப்புறங்களில் இதனை பயன்படுத்த இயலுமா, அதற்கான மென்பொருள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வது குறித்தும், தகவல்கள் பாதுகாப்பை உறுதி உள்ளிட்டவை குறித்தும் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
செல்போன் மூலம் பண பரிமாற்றம் செய்வது மேலும் பணத்தை மிஷின் மூலம் வங்கி கணக்கிற்கு செலுத்துவது, பணம் எடுத்தல், செக் போடுதல், வங்கி கணக்கு புத்தகத்தில் தகவல்களை பதிவிடுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பல லட்சம் ரூபாய் செலவாகிறது.
வங்கிக்கு செல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் பொழுது அதற்காக வசூலிக்கப்படும் தொகை, மென்பொருள் உள்ளிட்ட அதற்கான செலவிற்காக உள்ளது. எனவே சேவை கட்டணங்களுக்கான செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்தியாவிலேயே மென்பொருள் தயார் செய்வதும் அவசியம் மற்றும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எஸ்பிஐ ,ஐஆர்சிடிசி உள்ளிட்ட மென்பொருள்கள் மிகவும் சிறப்பானதாக உள்ளன. எஸ்பிஐ வங்கியின் மென்பொருள் அதிக அளவில் தகவல்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல்கட்டமாக நிதி சார்ந்த பரிமாற்றத்தில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு ஆண்டில் இந்தியாவிலேயே வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு தேவையான மென்பொருள் தயார் செய்யப்படும். மென்பொருள் தயார் செய்வதற்கு அதிக அளவில் செலவு தேவைப்படுவதில்லை. நிதி சார்ந்த பணபரிவர்த்தனைகளுக்கு முன்பு மென்பொருள்களின் தேவை குறைவாக இருந்தது.
தற்போது அதிக அளவில் தேவை உள்ளதால் மென்பொருளை வடிவமைத்தால் உடனடியாக வணிக ரீதியாக பயன்படுத்த முடியும். உள்நாட்டிலேயே நிதி சார்ந்த பயன்பாடுகளுக்கு தேவைப்படும் மென்பொருள் தயாரிக்கும் பட்ஜெட்டில் நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி உள்ளோம். அதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் நம்மிடம் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் தொய்வு ஏற்படுத்தியவர்களுக்கு ரூ.75,000 அபராதம் - சென்னை மாநகராட்சி