சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் முடிந்த நிலையில், "கலைஞர் இருந்திருந்தால் முதலமைச்சரின் பணியைப் பார்த்து கண்ணீர் விட்டு இருப்பார்" எனப் பேரவையில் துரைமுருகன் உருக்கமாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், 'இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதலமைச்சர் சிறந்து விளங்குகிறார். சர்வதேச அளவில் துபாயில் கூடுகின்ற 192 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
முன்னேற்றப் பயணம்: இப்போது கலைஞர் இருந்திருந்தால் முதலமைச்சரின் பணியைப் பார்த்து கண்ணீரே வடித்திருப்பார்; அதை நான் நினைத்துப்பார்க்கிறேன். இந்தப் பயணத்தின் மூலம் கல்வி, மருத்துவம், ஏழ்மை ஆகியவை நீங்கி, முன்னேற்றத்திற்கான பயணமாக இருக்கும்' என துரைமுருகன் வாழ்த்தி முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்தார்.
முன்னதாக, தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 23) சட்டப்பேரவையின் 110-விதியின் கீழ் செய்து தரப்பட்ட பொருளாதார முன்னேற்ற நலத்திட்ட உதவிகள் குறித்து பட்டியலிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் அறிவிப்பு