ETV Bharat / city

தேவைப்பட்டால் தஹில் ரமாணி பணியிட மாற்றத்திற்கான காரணம் கூறப்படும் - கொலீஜியம்

சென்னை: பணியிடமாற்ற விவகாரத்தில் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் பணியிட மாற்றத்திற்கான காரணத்தை தெரிவிக்க தயங்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற கொலீஜியம் விளக்கம் அளித்துள்ளது.

tahil ramani
author img

By

Published : Sep 13, 2019, 7:59 AM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தஹில் ரமாணி, மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில், பணிமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்ய தலைமை நீதிபதி தஹில் ரமாணி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது.

இதனால் அதிருப்தியில் ராஜினாமா செய்து, குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார் தஹில் ரமாணியின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள்,முன்னாள் நீதிபதிகள், நீதித்துறையின் முக்கிய பிரமுகர்களிடம் இந்த விவகாரத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் தொடர்ந்து நிலவி வந்தது.

நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடமாற்றம் தொடர்பாக, தற்போது உச்சநீதிமன்ற கொலீஜியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் சஞ்சீவ் எஸ். கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலீஜியம் எப்போதும் திடமான காரணங்களுடன் தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, சிறந்த நீதி நிர்வாகத்திற்காகத்தான் இடமாற்ற பரிந்துரைகளை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறை நலன் கருதி பணியிட மாற்றங்களுக்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட, இந்த விவகாரத்தில் பணியிடமாற்றத்திற்கான காரணத்தை வெளியிடுவதில் கொலீஜியத்திற்கு எந்த தயக்கமும் இல்லை, கொலீஜியத்தின் ஒவ்வொரு பரிந்துரையும் ஆழ்ந்த பரீசீலனைக்குப் பிறகு, ஒத்த கருத்துடன் தான் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடமாற்ற விவகாரத்தில், தேவைப்பட்டால் பணியிட மாற்றத்திற்கான காரணத்தை தெரிவிக்க தயங்க மாட்டோம் என உச்சநீதிமன்ற கொலீஜியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில், பணிமாற்ற முடிவை
மறுபரிசீலனை செய்ய, தலைமை நீதிபதி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்ததால், அதிருப்தியில் ராஜினாமா செய்து, குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார்.

தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள்,முன்னாள் நீதிபதிகள், நீதித்துறையின் முக்கிய பிரமுகர்களிடம் இந்த விவகாரத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் தொடர்ந்து நிலவி வந்தது.

நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடமாற்றம் தொடர்பாக, தற்போது உச்சநீதிமன்ற கொலீஜியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் சஞ்சீவ் எஸ். கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலீஜியம் எப்போதும் திடமான காரணங்களுடன்
தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, சிறந்த நீதி நிர்வாகத்திற்காகத்தான் இடமாற்ற பரிந்துரைகளை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறை நலன் கருதி பணியிட மாற்றங்களுக்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட, இந்த விவகாரத்தில் பணியிடமாற்றத்திற்கான காரணத்தை வெளியிடுவதில் கொலீஜியத்திற்கு எந்த தயக்கமும் இல்லை, கொலீஜியத்தின் ஒவ்வொரு பரிந்துரையும் ஆழ்ந்த பரீசீலனைக்கு பிறகு, ஒத்த கருத்துடன் தான் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.