சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பொன் மாணிக்கவேல் ஓராண்டில் சிலை கடத்தல் வழக்குகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், தன்னை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அலுவலராக உயர் நீதிமன்றம் நியமித்தபோதே அந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக்கடத்தல் சிறப்பு பிரிவில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும் 66 காவல் துறை அலுவலர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் 202 காவல்துறையினர் தன் தலைமையில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த நிலையில் 51 காவல் அலுவலர்களும், 15 காவலர்களும் தங்களை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
சிலை கடத்தல்: 2 அமைச்சர்களுக்கு தொடர்பு ?
இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், புதிதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு குழுவிற்கு 85 அலுவலர்கள், 108 காவலர்கள் மே மாதம் நியமிக்கப்பட்டனர். அதனையடுத்து சிலைக்கடத்தல் தொடர்பன விசாரணைகளில், ஏடிஜிபியின் தலையீடு, போதிய ஒத்துழைப்பு வழங்காததை ஆகியவற்றைக் எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பட்டது.
இந்நேரத்தில் தன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவானது, 116 வழக்குகளில் தகவல்களை திரட்டி, அதில் 59 வழக்குகளில் 110 சிலைகள் திருடப்பட்டிருப்பது கண்டறிந்தது. சிலைக்கடத்தல் தொடர்பாக திரட்டிய விசாரணை தகவல்கள் அடங்கிய குறுந்தகடுகளை தொலைத்த 31 வழக்குகளில், கடமை தவறிய காவல் துறையினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிலை கடத்தல் வழக்கு விவகாரம்: டிஎஸ்பி காதர்பாட்சாவின் மனு தள்ளுபடி
இத்தருணத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி, தனக்கு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் தேவையில்லை, டிஜிபியின் உத்தரவை மட்டுமே தான் பின்பற்றி சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிப்பதாக தங்களுடைய விசாரணையில் குறுக்கிட்டார்.
தங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைத்த இந்து அறநிலைய துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இத்தகைய பிரச்னைகளுக்கு மத்தியில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு அலுவலராக தன்னை நியமித்து ஓராண்டில் சிலைக்கடத்தல் தொடர்பாக 3 வழக்குகளில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருடப்பட்ட 12 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சாட்சிகள் உதவியால் நான்கு வழக்குகளில் சிலைத் திருட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 56 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிற்கு சொந்தமான ஆறு சிலைகள் சிங்கப்பூரில் இருந்தும், ஒன்பது சிலைகள் அமெரிக்காவில் இருந்தும் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. பாரம்பரிய சிலைகள் மீட்டு, அதை சோதனையிடுவதில் மாநில அரசு போதிய விருப்பம் காட்டுவதில்லை.
'பொன் மாணிக்கவேல் சமர்ப்பித்த அறிக்கை குறித்து சிபிசிஐடி விசாரிக்க மனு’
தங்களின் விசாரணைக்கான வாகன செலவு, வெளிநாடு சென்று விசாரிப்பதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்கக்கோரி கடிதம் அளித்தும் இதுவரை அரசு தரப்பில் பதில் அளிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.