ETV Bharat / city

கரோனாவால் எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்? - மருத்துவர்கள் சங்கம் கேள்வி - doctors death corona

தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என்னும் விவரத்தை அரசு வெளியிட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக சமத்துவ மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்

author img

By

Published : Aug 8, 2020, 9:46 AM IST

இதுகுறித்து சமூக சமத்துவ மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் உயிரிழப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? அதில் அரசு மருத்துவர்கள் எத்தனை பேர்? தனியார் மருத்துவர்கள் எத்தனை பேர்? உள்ளிட்ட விவரங்களை அரசு உண்மையாக வெளியிடவில்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கைப் பற்றிய புள்ளி விவரங்களை அரசு தொடர்ந்து வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும். மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.

மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்

அரசு மருத்துவர்கள், சுகாதாரத் துறைச் சார்ந்த நிரந்தர ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குகிறது. அதேபோல், அரசு மருத்துவனைகளில் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள், தனியார் மருத்துவர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்த மருத்துவர்களில் 90 விழுக்காட்டினருக்கும்மேல் தனியார் மருத்துவர்களாவர். தனியார் மருத்துவமனைகள் மருத்துவச் சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் அவ்வாறு ஈடுபடாவிட்டால், மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் , உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு மிரட்டுகிறது.

ஆனால் அந்த மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் இழப்பீடு தர மறுக்கிறது. கடமையைச் செய்ய வலியுறுத்தும் அரசு, அவர்களுக்கான உரிமையை தர மறுப்பது சரியல்ல. கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவது வரவேற்புக்குரியது.

அதை கரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும். அரசு மருத்துவர்கள் ஆற்றும் அளப்பரிய கடுமையான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பாராட்டி வருகிறார். இது வரவேற்புக்குரியது. அதே சமயம் அவர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு கோரிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக பரிசீலிக்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

மருத்துவத் துறையில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது முன்னோடியாக திகழும் தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்கு நீண்ட காலமாகவே மிகவும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. நியாயமான ஊதியம் வழங்கக்கோரி போராடிய அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கிறது.

அரியானா மாநில அரசு மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்களின் ஊதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி ஊதியத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஊதியத்தையும், பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தையும் உயர்த்த வேண்டும். மாதாமாதம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர் உட்பட அனைவரின் ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தனிச்சட்டம்...!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.