ETV Bharat / city

விடுதி உரிமையாளர் மிரட்டியதால் பெட்ரோல் குண்டு வீச்சு - MRM Residents

சென்னையில் விடுதி உரிமையாளர் மிரட்டியதால் விடுதியினுள் பெட்ரோல் குண்டு வீசினேன் என்று குண்டு வீசிய பாலியல் புரோக்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்

விடுதி உரிமையாளர் மிரட்டியதால் பெட்ரோல் குண்டு வீச்சு

author img

By

Published : Aug 29, 2022, 11:46 AM IST

சென்னை வடபழனி கங்கப்பா நாயுடு தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவர் அதே பகுதியில் எம்.ஆர்.எம் ரெசிடெண்ட்ஸ் என்ற பெயரில் தங்கும் விடுதியை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். கடந்த 26ஆம் தேதி வழக்கம் போல இயங்கி வந்த விடுதியினுள் இரவு 8.45 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் இருவர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த பெட்ரோல் வெடிகுண்டு வெடித்ததில் வரவேற்பு அறையில் இருந்த பொருட்கள் மற்றும் அங்கிருந்த கண்ணாடிகள் சேதமடைந்தன. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் தமீம் அன்சாரி அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத்(36) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், வினோத் மீது கூடுவாஞ்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பாலியல் புரோக்கர் தொழில் செய்து வரும் வினோத், கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் தொழிலுக்காக விடுதிக்கு பெண்களை அனுப்பி வந்துள்ளார். சமீபத்தில் வினோத் தனியாக தொழில் தொடங்கியதால் இந்த விடுதிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விடுதியின் உரிமையாளர், தொடர்ந்து வினோத்தை மிரட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த வினோத், மதுரவாயல் கொலை வழக்கில் கூட்டாளியாக இருந்த கலை என்பவருடன் இணைந்து விடுதியில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 30 அடி உயரம் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 இளைஞர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.