சென்னை: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா-வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி வருகிறது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் தென் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவ.19ஆம் அதிகாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.
12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு (Holiday for schools) நவ.19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நவ.19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை