ETV Bharat / city

'சித்திரைத் திருநாளில் துன்பங்கள் மறைந்து இன்பங்கள் நிறையட்டும்!' - Chithirai Thirunal greetings from Anbumani Ramadas

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அனைவருக்கும் தனது சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

chithirai thirunal - Anbumani
chithirai thirunal - Anbumani
author img

By

Published : Apr 13, 2021, 12:56 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், "வசந்த காலத்தின் வருகையை உணர்த்தும் சித்திரைத் திருநாளைக் கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.

தைத்திருநாள் எப்படியோ, அதேபோல்தான் சித்திரைத் திருநாளும். இரு திருநாள்களுமே அறுவடையுடனும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியுடனும் சம்பந்தப்பட்டவை ஆகும். உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அனைத்து நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

கடந்த காலங்களில் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஏதேனும் துன்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவை அனைத்தும் மறைந்து மக்களின் வாழ்வில் அமைதி, வளம், மகிழ்ச்சி பொங்குவதற்காகக் கடுமையாக உழைக்க இந்தச் சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் " என்று குறிப்பிட்டுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.