இது தொடர்பாக, தமிழ்நாடு மின் ஊழியர் சங்க மத்திய அமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "மின்சார வாரியம் ஒரு பொதுத்துறை நிறுவனம். பல்வேறு பேரிடர் காலங்களிலும், தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என மின்துறை அமைச்சர் உறுதியளித்தும், அது செய்யப்படவில்லை.
தமிழக அரசு 14,954 நபர்களை கேங்மேன் பதவிக்கு தேர்வு செய்து, அதில் 10 ஆயிரம் பேரை நிரப்புவதாக அறிவித்துள்ளது. ஆனால், தேர்ச்சிப் பட்டியல் வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இதற்கு தொழிற்சங்கம் மீது உள்ள வழக்கை காரணம் காட்டுகிறது தமிழக அரசு.
தேர்வு நடத்தும் போதும், நேர்முகத் தேர்வு நடத்தும் போதும் இந்த வழக்கை காரணம் காட்டாத தமிழக அரசு, பணி ஆணை வழங்கும் போது மட்டும் வழக்கை காரணம் காட்டுகிறது. 23 ஆயிரம் கள உதவியாளர்கள் 8,000க்கும் மேற்பட்ட கம்பியாளர் பதவிகள் என 52,000 பணி இடங்கள் காலியாக உள்ளன. எனவே கேங்மேன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: திருச்சி அருகே 15 ஏக்கரில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!