ETV Bharat / city

இட ஒதுக்கீட்டை தொடரவும்... நுழைவுத்தேர்வை நீக்கவும்... - உயர்கல்வித்துறை

சென்னை: புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை கைவிடவும் உயர்கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்ட குழு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

2020
2020
author img

By

Published : Oct 22, 2020, 12:25 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020இல் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில், முன்னாள் துணைவேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரிடமும் ஆன்லைன் மூலம் கருத்துகளை கேட்டறிந்ததோடு, உயர்கல்வித்துறையில் உள்ள பிற அம்சங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, மத்திய கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது.

அதில், பல்கலைக்கழகங்களின் மூலம் புதியப் பாடப்பிரிவுகள் துவங்குவது, பட்டப்படிப்புகளில் மாணவர்கள் படிக்கும் காலத்தினை மாற்றி அமைப்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் எந்தப் பகுதியிலும் இட ஒதுக்கீடு குறித்த வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்ற உறுதியை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு, தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படாது எனவும், ஏற்கனவே உள்ள முறையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு நீட் உள்ளிட்ட எந்தவித நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது எனவும் தமிழ்நாடு அரசின் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய உயர்கல்வி குழுமத்தை ஏற்படுத்தி, அதன்கீழ் யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் ஆகிய அமைப்புகளை இணைக்கும் போது, அக்குழுவில் மாநிலங்களின் பிரதிநிதிகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்விக் கொள்கையால், 2030இல் நாடு முழுவதும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் தற்பொழுதே 49 விழுக்காடு பெற்று அந்த நிலையை அடைந்திருப்பதாகவும், மத்திய கல்வித்துறைக்கு, தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆராயும் குழு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்வை நடத்த அருகதையற்றவர்கள், கல்வி தரத்தை நிர்ணயிப்பதா?- கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.