ETV Bharat / city

மூன்று ஆண்டுகள் விடுமுறை எடுத்தவரை பணிநீக்கம் செய்தது செல்லாது...உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!! - High Court has ordered that the dismissal of a constable who took leave for three years due to ill health is invalid

உடல் நலக்குறைவால் மூன்று ஆண்டுகள் விடுப்பு எடுத்த காவலரை பணிநீக்கம் செய்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 10, 2022, 8:57 AM IST

சென்னை: தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ஜெகதீசன். இவர் 2009ம் ஆண்டு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சொந்த ஊரில் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெற விரும்பிய ஜெகதீசன், மருத்துவ அறிக்கைகளுடன் மருத்துவ விடுப்பு கோரினார். அதனை ஏற்ற காவல் கண்காணிப்பாளர் அவரது விடுப்பை வரன்முறைப்படுத்தி உத்தரவு பிறப்பித்தார்.

976 நாட்கள் விடுப்புக்கு பின், மருத்துவ குழு முன் ஆஜராகி மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், அனுமதியின்றி தொடர் விடுமுறை எடுத்ததாக கூறி அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதை எதிர்த்து ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏற்கனவே விடுப்பை வரன்முறைப்படுத்திய பின், பணியில் சேர்ந்த மனுதாரரை பணிநீக்கம் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி, பணிநீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'ஈடிவி பாரத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி!' - மனதார நன்றிகூறிய நாடோடி பழங்குடியின மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.