ETV Bharat / city

பாலம் அமைக்கும் இடத்தை மாற்றக்கோரிய வழக்கு - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

சாலைக்குகீழ் பாலம் அமைக்கும் திட்டத்தை பொதுமக்களுக்கு பயன்படும் இடத்தில் மாற்றி அமைக்கக்கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court
High Court
author img

By

Published : May 10, 2022, 10:35 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மக்கள் நல்வாழ்வு சங்கச்செயலாளர் சிராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முதல் பெங்களூரு வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையிலிருந்து ஆறு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சிக்கரிமேடு அருகே தேசிய நெடுஞ்சாலையை வாகனங்கள் மற்றும் மக்கள் எளிதாக கடக்கும் வகையில், நெடுச்சாலைக்கு கீழ் பாலம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அந்த இடம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடத்திலிருந்து தொலைவில் உள்ளதால், மக்களுக்கு சிரமம் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கிரிமேடு அருகே சுங்கச்சாவடியும் இருப்பதால் பாலம் அமையும்பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். அந்த இடத்திற்குப் பதிலாக மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, கலைக்கல்லூரிகள், பள்ளிகள் உள்ள போலுப்பள்ளி கிராம பகுதியில் அமைத்தால், அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே, சிக்கரிமேடு பகுதியில் அமைய இருக்கும் சாலைகீழ் பாலத்தை போலுப்பள்ளி சந்திப்பு அருகே மாற்றி திட்டமிடும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மின்வெட்டு குறித்து பேசினால் மிரட்டுவதா?-அமைச்சருக்கு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.