ETV Bharat / city

அசானி புயலால் தமிழ்நாட்டில் மேலும் மழை தொடர வாய்ப்பு! - heavy rains

தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயலால் தமிழ்நாட்டில் மேலும் மழை தொடர வாய்ப்பு.

author img

By

Published : May 10, 2022, 4:56 PM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (மே10) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர், "அசானி தீவிர புயல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு ஆந்திர கடற்கரை திசையில் நகர்ந்து செல்லும்” என்றார்.
மேலும், “அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அசானி புயலால் மேலும் மழை தொடர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.