தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் பருவமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இன்று அரூர், சின்னாங்குப்பம், கோடிநாதம்பட்டி கூட்ரோடு, தென்கரைகோட்டை, மெனசி, மோளையானூர், கவுண்டம்பட்டி, தீர்த்தமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான பருவநிலை நிலவியது. தொடர் மழை காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.