ETV Bharat / city

தண்ணீரில் மிதக்கும் அசோக் நகர்

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக சென்னை அசோக் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மிதக்கின்றன.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை அசோக் நகர், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.
தண்ணீரில் மிதக்கும் அசோக் நகர்
author img

By

Published : Nov 28, 2021, 1:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 1ஆம் தேதிமுதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதுவரை காணாத அளவிற்கு சென்னையில் மழை அதிகமாகப் பெய்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி முழுவதும் நீர் சூழ்ந்து குளம்போல் காட்சி அளிக்கிறது. அதேபோல் காவலர் பயிற்சிப் பள்ளி முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதால் குளம்போல் காட்சியளிக்கின்றது.

அசோக் நகர்
அசோக் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நீர் வடியாமல் இரண்டு அடி அளவிற்கு உள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் வைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றது. தொடர்ந்து நீர் தேங்கி உள்ளதால் அந்த நீர் சாக்கடை வாசம் அடிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.