சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 187 நாடுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். 7 சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்து, எட்டாவது சுற்று நேற்று (ஆக. 6) நடைபெற்றது. இந்நிலையில், வழக்கத்தை விட ஏராளமான பார்வையாளர்கள் நேற்று குவிந்தனர்.
குறிப்பாக, நேற்று விடுமுறை நாள் என்பதால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செஸ் போட்டிகளை கண்டுகளித்தனர். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள செஸ் 'தம்பி' சிலைகள் முன் புகைப்படங்கள் எடுப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
மேலும், நேற்று வரை 4 ஆயிரத்து 714 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 6 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு "தகைசால்தமிழர்" விருது