ETV Bharat / city

Heavy Rain Alert: இன்று இரவு முதல் நாளை இரவு வரை சம்பவம் இருக்கு மக்களே - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னைக்கு நாளை (நவ.18) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை சென்னை மற்றும் வட மாவட்டங்களின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு முதல் நாளை இரவு மிக கனமழை
இன்று இரவு முதல் நாளை இரவு மிக கனமழை
author img

By

Published : Nov 17, 2021, 7:04 PM IST

சென்னை: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை (Heavy Rain) பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மிக கனமழை பெய்யும்
மிக கனமழை பெய்யும்

நவ. 18 : கன முதல் மிக கன மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை (நவ. 18) இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும்;

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும்;

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மிக கனமழை பெய்யும்
மிக கனமழை பெய்யும்

இன்று இரவு முதல் நாளை இரவு வரை

இச்சூழலில் தமிழ்நாடு மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட்டில், "மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இதனால், சென்னையில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
தமிழ்நாடு வெதர்மேன் - பிரதீப் ஜான்

மேலும், இதேபோல வட மாவட்டத்தில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ''இது வெறும் விழிப்புணர்வு போஸ்ட் தான். அதிகாரப்பூர்வ வானிலை மையத் தகவலையும், அரசின் அறிவிப்புகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்'' என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: #WeStandwithSurya: 'சூர்யாவிற்கு அரசும், காவல் துறையும் ஆதரவு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.