சென்னை: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவருடைய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு வேலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக இதயம் கொண்டு வரப்பட்டது.
நேற்று (மே.1) மதியம் 3 மணி அளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கிளம்பி 4:30 மணியளவில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையை சென்றடைந்தது. குறிப்பாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக சென்னை எல்லைக்குட்பட்ட வானகரம் பகுதி முதல் அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள கிரீம்ஸ் ரோடு பகுதி வரை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பான ஏற்பாட்டால் ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் இருந்து சென்னைக்கு 1.30 மணிநேரத்தில் இதயம் கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: 'கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர் சூட்டப்படும்' - முதலமைச்சர் ஸ்டாலின்