சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், ” தெருநாய்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து, அதனால் மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. வெறிநாய்கடிக்கு மருந்துகள் கொடுக்கப்படும் நிலையில், அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ” தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை கால்நடைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தில் தெருநாய் கடித்து உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
வெறிநாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போட வேண்டிய நிலை தற்போது இல்லை. வெறிநாய்க்கடிக்கு தாலுக்கா அளவிலேயே மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன “ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம் - அமைச்சர் ஜெயக்குமார்