ETV Bharat / city

கண் தானம் குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கண்தானம் செய்வதில் பின் தங்கியுள்ளதால் கண் தானம் குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம்

author img

By

Published : Nov 19, 2021, 7:50 PM IST

சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சை செய்யும் முறையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்திந்த அவர், “இந்தியாவிலேயே முதன் முறையாக முப்பரிமாண தொழில்நுட்பத்தின் மூலம் கண் புரை அறுவை சிகிச்சையை செய்யும் முறையை அப்பாசாமி அசோசியேஷன் நிறுவனம் தயார் செய்துள்ளது.

அதன் மூலம் முப்பரிமாண முறையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டிற்குள் கண்பார்வைக் குறைபாடு 0.25 விழுக்காட்டிற்கு கீழ் கொண்டு வருவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரசு செயல்பட்டு வருகிறது.

2021ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக்குறைபாடை பரிசோதனை செய்தல், பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்குதல், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தூரப்பார்வை கண்டறிந்து சிகிச்சை, கண்ணாடி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.

கண்கள் தானம்

அரசு கண் மருத்துவமனைகளில் நடப்பாண்டில் 65 ஆயிரம் கண்புரை அறுவை சிகிச்சைகள் இலக்கு நிர்ணயித்து இதுவரை 20ஆயிரத்து 670 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்பு தமிழ்நாட்டில் கூடுதலாகி பெரியளவில் பெறப்படுகிறது.

கண்தானம் 10ஆயிரம் ஜோடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2ஆயிரத்து 612 கண் ஜோடிகள் தானமாகப் பெற்று, கண் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. முப்பரிமாண அறுவை சிகிச்சைச் செய்ததும் இந்த மருத்துவமனையின் மற்றொரு சிறப்பாகும்.

கலைஞரின் வருமுன்காப்போம் திட்டத்தின் மூலம் கண்பரிசோதைன செய்யப்பட்டு, கண்ணாடி வழங்குவது, கண்புரை அறுவை சிகிச்சை செய்ய தேவைப்படுவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் முப்பரிமாண தொழில்நுட்டபத்தின் மூலம் செய்யப்படும். சென்னையிலுள்ள 200 ஆண்டுகள் பழமையான கண் மருத்துவமனையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.

நீட் தேர்வு விலக்கு

66 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் நிதியாண்டில் அவர்களுக்கு புதிய விடுதிக்கான ஏற்பாடும் செய்யப்படும்.

மக்கள் பிரதிநிதிகள் மக்கள் மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானத்திற்கு ஆளுநர் பரிந்துரைத்து அனுப்ப வேண்டும் என்பது விதி. அந்த வகையில் அரசின் செயலாளர் பேசியுள்ளனர். இதில் எந்தவிதமான எதிர்மறைக் கருத்துக்கள் சொல்லப்படவில்லை. எனவே நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான மசோதா குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்துப் பேசி ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஒன்றிய அரசிற்கு அனுப்பும் பணி விரைவில் நடக்கும் என எதிர்பார்ப்போம்.

மருத்துவர்கள் மீது பாலியல் புகார்

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கண்தானத்தில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளதால் கண் தானம் குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ராஜிவ்காந்தி மருத்துவர்கள் மீது பாலியல் புகார் வந்தவுடன் அவர்களை காவல் துறையில் கைது செய்துள்ளனர். சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சட்ப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கரோனா முதல் 2ஆவது அலையின்போது, சிகிச்சையளிப்பதற்காக அதிகளவில் மருத்துவர்கள் தேவைப்பட்டனர். தற்போது கரானோவின் தாக்கம் குறைந்துள்ளதால் அரசின் சார்பாக தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Chennai High Court: ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது என உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.